உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில் நிலத்தை பாதுகாக்க ரூ.32 லட்சத்தில் சுற்றுச்சுவர்

கோவில் நிலத்தை பாதுகாக்க ரூ.32 லட்சத்தில் சுற்றுச்சுவர்

குன்றத்துார் :குன்றத்துார் அருகே கெருகம்பாக்கத்தில் பழமைவாய்ந்த நீலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் இக்கோவில், கேது பகவானின் பரிகாரத் தலமாக உள்ளது.செவ்வாய்க்கிழமை தோறும் இக்கோவிலில், எமகண்ட நேரத்தில் கேது பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.இக்கோவிலுக்கு சொந்தமான 2.3 ஏக்கர் நிலம், குன்றத்துார் - -போரூர் நெடுஞ்சாலையில் கெருகம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ளது.இந்த நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில், 32 லட்சம் ரூபாய் மதிப்பில் 90 மீட்டர் நீளத்திற்கு மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை