உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது சாலையை ஆக்கிரமிக்கும் தனியார் வணிக வளாகம்

பொது சாலையை ஆக்கிரமிக்கும் தனியார் வணிக வளாகம்

ஜல்லடையன்பேட்டை:ஜல்லடையன்பேட்டையில் உள்ள பிரபல தனியார் நிறுவனம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சாலையை, தன் வாகன நிறுத்தம் பகுதியாக பயன்படுத்தி வருகிறது. இதனால், பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக, அப்பகுதியினர் குற்றச்சாட்டி வருகின்றனர்.இது குறித்து பகுதிமக்கள் கூறியதாவது:மேடவாக்கம் அடுத்த ஜல்லடையன்பேட்டையில், ஜெயச்சந்திரன் என்ற பெயரில் தனியார் வணிக வளாகம் உள்ளது.வார நாட்களில் 10,000 பேரும், விடுமுறை நாட்களில் 20,000 பேரும், இக்கடையில் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.இந்த கடை வளாகத்தின் முன்பகுதியில், வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலை உள்ளது. இதில், அணுகு சாலைக்கான இடத்தை முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ள இந்நிறுவனம், அந்த இடத்தை தங்களுக்கான 'பார்க்கிங்' பகுதியாக மாற்றி, 'பேரிகார்டர்' போட்டு, தடுப்பு ஏற்படுத்தி வைத்துள்ளது.தவிர, வணிக வளாகத்தின் இடப்பக்கம் உள்ள சாலையையும், தங்களுக்கான பார்க்கிங் பகுதியாக, இந்நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இதனால், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், பொது போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட வணிக வளாக நிர்வாகத்திடம், போக்குவரத்து போலீசாரிடம் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி