உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடல் சீற்றத்தால் சேதமாகும் தார் சாலை கான்கிரீட் சாலை அமைக்க கோரிக்கை

கடல் சீற்றத்தால் சேதமாகும் தார் சாலை கான்கிரீட் சாலை அமைக்க கோரிக்கை

எண்ணுார், கடல் சீற்றத்தால், சேதமாகும் தார் சாலைக்கு மாற்றாக, கான்கிரிட் சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.எண்ணுார், தாழங்குப்பம் கடற்கரையில், 50க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்காக, படகுகளை இந்த வழியாக எடுத்து செல்கின்றனர்.சூறாவளி, புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதிகனமழையால் ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக, ஆக்ரோஷமாக கரை வந்து மோதும் அலைகளால், தாழங்குப்பம் கடற்கரை ஒட்டிய, எண்ணுார் விரைவு சாலையின், ஒரு பகுதி சேதமாகியுள்ளது. இதே நிலை நீடித்தால், கடல் சீற்றத்தால், தார் சாலை முழுதுமாக சேதமாகி, போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.'சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, கடற்கரையொட்டிய சேதமடைந்த பகுதியில், தார் சாலைக்கு மாற்றாக, கான்கிரீட் சாலையாக மாற்ற வேண்டும்.'அவ்வாறு அமைத்தால், கடல் சீற்றத்தின்போது, ஆக்ரோஷமாக கடல் அலைகள் கரை வந்து மோதினாலும், சாலைக்கு பாதிப்பிருக்காது' என, அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
அக் 19, 2024 21:49

வேணாங்க. திருட்டு திராவிடனுங்க சாம்பலை மண்ணோடு கலந்து காங்கிரீட் ரோடுன்னு கணக்கு காமிச்சுருவாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை