உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தப்ப முயன்ற ரவுடிக்கு மாவுக்கட்டு

தப்ப முயன்ற ரவுடிக்கு மாவுக்கட்டு

ஓட்டேரி,: அயனாவரத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 46; 'ஏ' பிரிவு ரவுடி. இவர் மீது, கொலை, கொலை முயற்சி உட்பட 11 வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்து ஆறு மாதத்திற்கு முன் ஜாமினில் வெளியே வந்த கண்ணன், விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கூட்டாளிகளான, பெரம்பூரைச் சேர்ந்த பிரான்சிஸ், 27, சரவணகுமார், 26 ஆகியோருடன் தலைமறைவானார். போலீசார் மூவரையும் தேடி வந்த நிலையில், புளியந்தோப்பு அருகே காரில் சென்ற மூவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது தப்பும் முயற்சியில், கண்ணனின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ