உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நான்கு முனை சந்திப்பில் சிக்னல் அமைப்பு

நான்கு முனை சந்திப்பில் சிக்னல் அமைப்பு

சென்னை, ராயப்பேட்டையில் விபத்தை தடுக்க, நான்கு சாலை சந்திப்பில் புதிதாக, 'சிக்னல்' அமைத்து, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில், தேவையான இடங்களில் புதிதாக போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக சென்னை, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலை - வெஸ்ட்காட் சாலை - ஜி.பி., சாலை - பாரதி சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் தாறுமாறாக சென்றனர். இதனால் நெரிசல் ஏற்பட்டதோடு, சிறு சிறு வாகன விபத்துக்களும் நடைபெற்று வந்தன.இதையடுத்து, அப்பகுதியில் தற்போது, போக்குவரத்து போலீசார் சிக்னல் அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ