உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மேம்பால வளைவில் சாய்ந்துள்ள முட்செடி, மரக்கிளையால் அச்சம்

மேம்பால வளைவில் சாய்ந்துள்ள முட்செடி, மரக்கிளையால் அச்சம்

அண்ணா நகர், அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட, அண்ணா நகர் வளைவு அருகில், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் மேம்பாலம் உள்ளது.இந்த மேம்பாலத்தால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.மேம்பாலத்தில், அண்ணா நகர் செல்லும் வழியில் அரசின்சித்தா மருத்துவமனையை நோக்கிச் செல்ல, சிறிய வளைவு பாதை உள்ளது. அந்த பாதையில்சில இடங்களில் பெரிய அளவிலான மரக்கிளைகள் மேம்பாலத்தில் சாய்ந்துள்ளன.அதேபோல், ஒரு பகுதியில் முட்செடியும் வளர்ந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி, விபத்தில் சிக்கி வருகின்றனர்.இரவு வேளையில், மரக்கிளைகள் இருப்பதே தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர். எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த முட்செடி, மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ