போதையில் துாங்கிய வாலிபர் பலி
சேலையூர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் லால்சந்த், 35. சேலையூர் அடுத்த மகாலட்சுமி நகரில் நண்பர்களுடன் தங்கி, கட்டட வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, மது அருந்தி கட்டட பணி நடைபெறும் இடத்தில், கார்த்திக் என்பவருடன் சேர்ந்து துாங்கினார். நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் '108' ஆம்புலன்சுக்கு தகவல்தெரிவித்தனர். அவர்கள் வந்து பரிசோதனை செய்ததில், லால்சந்த் இறந்தது தெரிந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.