சில்மிஷ வாலிபர் கைது
சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண், 28ம் தேதி மதியம், எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள துணிக்கடைக்கு சென்றார்.அப்போது கடை ஊழியர், அவரிடம் அவதுாறாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், எழும்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணையில், சூளை நெடுஞ்சாலையைச் சேர்ந்த அசோக் தாக்கூர், 34, என்பவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.