உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காஸ் பங்க்கில் தகராறு வாலிபர் உதடு கிழிந்தது

காஸ் பங்க்கில் தகராறு வாலிபர் உதடு கிழிந்தது

கொளத்துார் :மாதவரம், பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் சிவசந்திரன், 28. திருவண்ணாமலையை சேர்ந்த இவர், மாதவரத்தில் தங்கி பிளம்பிங் வேலை செய்து வருகிறார். நேற்று காலை, இவர் தன் மாமா குமார், நண்பர் அஜித்குமாருடன், 'வேகன் ஆர்' காரில் கொளத்துார் - ரெட்ஹில்ஸ் பிரதான சாலையில் உள்ள, காஸ் பங்க்கில், காருக்கு காஸ் நிரப்ப சென்றனர்.அப்போது, காஸ் பங்க்கில் பணியாற்றிய அய்யனார், 28, அன்பவருடன், சிவசந்திரன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.அதனால் ஏற்பட்ட தகராறில், சிவசந்திரன் முகத்தில் அய்யனார் தாக்கியுள்ளார். இதில், அவரது உதடு கிழிந்தது.பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசந்திரனுக்கு, உதட்டில் நான்கு தையல்கள் போடப்பட்டன.இதுகுறித்த புகாரின்படி, கொளத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அய்யனாரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை