மேலும் செய்திகள்
சில வரி செய்திகள்
13-Oct-2025
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில், நேற்று மாலை, ஆதிமேளம், மல்லரம் கம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சென்னை மெரினா கடற்கரை, நீச்சல் குளம் அருகில் உள்ள பகுதி, உலகத்தரம் வாய்ந்த நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக மாற்றப்பட்டது. இங்கு, தமிழக பாரம்பரிய கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மாநகராட்சி சார்பில் நேற்று மாலை, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், ஆதிமேளம், வில்லுப்பாட்டு, மல்லர் கம்பம் உள்ளிட்ட தென்னிந்திய நாட்டுப்புறக் கலைகள் அரங்கேற்றப்பட்டன. இதில், 40க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.
13-Oct-2025