உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு பணி தருவதாக ஆட்டை மாநகராட்சி ஊழியர் கைது

அரசு பணி தருவதாக ஆட்டை மாநகராட்சி ஊழியர் கைது

முத்தியால் பேட்டை, அரசு வேலை வாங்கி தருவதாக, 17.50 லட்சம் ரூபாயை ஆட்டையை போட்ட, மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.பிராட்வே, அப்பாராவ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர், 49. இவர், தன் உறவினர் இருவருக்கு, கணினி இயக்குநர் அரசு பணிக்காக, நண்பர் வாயிலாக அறிமுகமான, ஓட்டேரியைச் சேர்ந்த முத்துராமன் என்பவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.முத்துராமன், அவரது மனைவி உஷாராணி ஆகியோர், தாங்கள் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ஜெய்சங்கரிடம், 17.50 லட்சம் ரூபாய் கேட்டனர்.கடந்தாண்டு, ஜன., மாதம் பணம் கொடுத்த நிலையில், பிப்., மாதம், அரசு பணிக்கான நியமன ஆணையை ஜெய்சங்கரிடம் வழங்கியுள்ளனர். அந்த ஆணையை பரிசோதித்த போது, போலியானது என்பது தெரியவந்தது.இது குறித்து ஜெய்சங்கர், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், மோசடியில் தொடர்புடைய, ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த முத்துராமன், 55, என்பவரை, குன்றத்துாரில் வைத்து, நேற்று கைது செய்தனர்.விசாரணையில் அவர், சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலத்தில் உதவியாளராக வேலை செய்வது தெரியவந்தது. விசாரணைக்கு பின் அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவான உஷாராணியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ