உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  விபத்தில் சிக்கிய ஆவின் லாரி:ஓ.எம்.ஆரில் வாகன நெரிசல்

 விபத்தில் சிக்கிய ஆவின் லாரி:ஓ.எம்.ஆரில் வாகன நெரிசல்

சோழிங்கநல்லுார்: ஆவின் பால் லாரி விபத்தில் சிக்கியதால், ஓ.எம்.ஆரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாதவரத்தில் இருந்து நேற்று காலை, சோழிங்கநல்லுார் நோக்கி ஆவின் பால் லாரி புறப்பட்டது. ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம் அருகில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, அணுகு சாலை தடுப்பில் மோதி சாய்ந்தது. இதனால், ஓ.எம்.ஆரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால், மாற்று வழி இல்லாமல், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதையடுத்து, மூன்று மணி நேரத்திற்கு பின், மெட்ரோ ரயில் பணி தளத்தில் உள்ள கிரேன் வாயிலாக, ஆவின் பால் லாரி அகற்றப்பட்டது. அதன்பின், போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை