மேலும் செய்திகள்
ராஜஸ்தானி சங்கத்தில் மஹா ருத்ராபிஷே கம்
28-Jul-2025
ஈஞ்சம்பாக்கம், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஈஞ்சம்பாக்கம் இஸ்கான் கோவிலில் நடந்த மஹா அபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இஸ்கான் கோவிலில், ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி விழா நேற்று நடந்தது. காலை மங்கள ஆரத்தி நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. பாகவதம் வகுப்பு, குருப் பூஜை, மற்றும் அழகாக அலங்கரிக்கப்பட்ட தெய்வங்களின் தரிசனம் மற்றும் கீர்த்தன மேளா, பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. மாலை சந்த்யா ஆரத்தி, இரவு கிருஷ்ணருக்கு பால், நெய், தேன் மற்றும் பழச்சாறுடன் மஹா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மஹா ஆரத்தியுடன், பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
28-Jul-2025