உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

கொளத்துார், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். மாதவரத்தை சேர்ந்த விஜய், 26 என்பவர் கொலைமுயற்சி வழக்கு ஒன்றில் 2024ம் ஆண்டு கொளத்துாரில் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த விஜய், விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து விஜயை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டுமென கடந்த 9ம் தேதி நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதையடுத்து கொளத்துார் போலீசார் நேற்று காலை விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை