உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமறைவு குற்றவாளி சிக்கினார்

தலைமறைவு குற்றவாளி சிக்கினார்

வேளச்சேரி, பள்ளிக்கரணை, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 26. இவர், 2022ம் ஆண்டு கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.ஜாமினில் வெளிவந்த இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். வேளச்சேரி போலீசார் அவரை தேடி வந்தனர்.வேளச்சேரி, தரமணி சுற்றுவட்டாரப் பகுதியில், மீண்டும் கஞ்சா வியாபாரத்தில் ராஜேஷ்குமார் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி, போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.இந்நிலையில், நேற்று அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ராஜேஷ்குமாரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி