மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை இருவர் கைது
09-May-2025
கொடுங்கையூர், கொடுங்கையூர், பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சாவுடன் மர்ம நபர்கள் சுற்றித்திரிவதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு, கடந்த 19ம் தேதி தகவல் கிடைத்தது.இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கிேஷார்குமார், 31, என்பவரை கைது செய்து, 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கில் தலைமறைவு குற்றவாளியான, பழைய வண்ணாரப்பேட்டை, மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்கிற 'தடி' சரவணன், 37, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். 'தடி' சரவணன் மீது ஏற்கனவே ஏழு வழக்குகள் உள்ளன.
09-May-2025