உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.4 கோடியில் கண்ணகிநகரில் ஏசி நுாலகம்

ரூ.4 கோடியில் கண்ணகிநகரில் ஏசி நுாலகம்

கண்ணகிநகர், கண்ணகிநகர் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், 23,704 வீடுகள் உள்ளன. இங்குள்ள பகுதிநேர நுாலகம் தினமும், 2 மணி நேரம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய முழு நேர நுாலகம் அமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, நுாலகம் கட்ட, 11,158 சதுர அடி பரப்பு இடத்தை வாரியம் ஒதுக்கியது. இதில், அனைத்து வசதிகளுடன், 'ஏசி' வசதியுடன் கூடிய நவீன நுாலகம் கட்ட, 4 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியது. இதில், 8,633 சதுர அடி பரப்பில், இரண்டடுக்கு கட்டடம் கட்டப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என, வாரிய அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை