உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காசா கிராண்டு புதுப்பாக்கம் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேக வீடுகள்

காசா கிராண்டு புதுப்பாக்கம் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேக வீடுகள்

சென்னை, சென்னை புதுப்பாக்கத்தில் மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக குடியிருப்பு திட்டத்தை, காசாகிராண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: பல்வேறு குடியிருப்பு, வில்லா திட்டங்களை செயல்படுத்தி வரும் காசா கிராண்ட் நிறுவனம் முதல்முறையாக, 'காசாகிராண்டு சியர்ஸ்' என்ற பெயரில், வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை, புதுப்பாக்கத்தில், மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை துவக்கி உள்ளது.இங்கு, 5.2 ஏக்கர் நிலத்தில், ஒன்று, இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறைகளுடன், மூத்த குடிமக்களுக்காக, 331 வீடுகள் கட்டப்படுகின்றன.இதில், மினி கிளினிக், பிசியோதெரபி அறை, 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை, சிரிப்பு சிகிச்சை மண்டலங்கள், வெளிப்புற போர்டு கேம்கள், ஆரோக்கிய புல்வெளிகள் என, மன அழுத்தம் இல்லாத அமைதியான வாழ்க்கைக்கு ஏற்ற வசதிகள் செய்யப்படும். பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் வழுக்காத தரை, கைபிடிகள், 24 மணி நேர அவசர அழைப்பு சாதனம் ஆகிய வசதிகளுடன், 89 லட்ச ரூபாய் முதல் வீடுகள் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. காசாகிராண்ட் நிறுவனர் அருண் கூறியதாவது: காசாகிராண்டு சியர்ஸ் திட்டத்தில், மூத்த குடிமக்களின் ஓய்வு கால ஆண்டுகள் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான அமையும். இத்திட்டம், தென் மாநிலங்களில் மூத்த குடிமக்களுக்காக பிரீமியம் தரத்திலான வளாகங்களை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் லட்சியத்தின் அடித்தளமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.கூடுதல் விபரங்களுக்கு, 98844 60877 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை