மேலும் செய்திகள்
600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு
01-Feb-2025
சென்னை:திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது.அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகள் உள்ளன. அதன் அருகில் தலா, 600 மெகா வாட் திறனில் இரு அலகுகள் உடைய வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது.இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம், சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது. மின் நிலையங்களில் உள்ள அலகுகளில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' உள்ளிட்ட காரணங்களால், மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.இந்நிலையில், மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், மின் உற்பத்தி கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள், நேற்று, வட சென்னை மின் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.மின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல், தடையின்றி மின் உற்பத்தியை உறுதி செய்வது தொடர்பாக அதிகாரிகள், பொறியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
01-Feb-2025