ஓட்டையான அ.தி.மு.க., கோட்டை தி.மு.க., - எம்.எல்.ஏ., பேச்சு
வடபழனி, சென்னை தென்மேற்கு மாவட்டம், தி.நகர் கிழக்கு பகுதி, 130 வது வட்ட தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் முன்னிட்டு 'ஏன் வேண்டும் தி.மு.க.,' என்ற தலைப்பில், விளக்க உரை கூட்டம் வடபழனியில் நேற்று நடந்தது. இதில், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், 133 வது வார்டு கவுன்சிலர் ஏழுமலை, 130 வட்ட செயலர் கமல், கட்சியின் மேலிட பேச்சாளர் சைதை சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி பேசியதாவது: மக்கள் பணி செய்கிறது தி.மு.க., அரசு. 10 ஆண்டு ஆட்சியில் அ.தி.மு.க., எந்த பணியும் செய்யவில்லை. அவர்கள் செய்தது கொள்ளையடிக்கும் பணி மட்டுமே. தி.நகர் தொகுதியில் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கிற்காக நீதிமன்றம் சென்றுள்ளார்.அ.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த தி. நகரை, ஓட்டையாக்கியது தி.மு.க., தொண்டர்கள் உழைப்புதான். இவ்வாறு அவர் பேசினார். இதில், 130வது வார்டு கவுன்சிலர் பாஸ்கர்,சென்னை தென் மேற்கு மாவட்ட செயலரும், மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வுமான வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.