உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு செங்கோல் பரிசு

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு செங்கோல் பரிசு

சென்னை; செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் எழுச்சி பயணம் மேற்கொண்ட அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, கட்சி நிர்வாகி பெரும்பாக்கம் ராஜசேகர் வெள்ளி செங்கோல் பரிசளித்தார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற கோஷத்துடன், தமிழகம் முழுதும் எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டசபை தொகுதிகளில், கடந்த 22ம் தேதி பிரசாரம் மேற்கொண்டார். பழனிசாமிக்கு, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில், செய்யூர் தொகுதிக்கு வந்த பழனிசாமிக்கு, அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவை துணை செயலர் பெரும்பாக்கம் ராஜசேகர், வெள்ளி செங்கோல் பரிசளித்தார். இந்நிகழ்வில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன், மாவட்ட செயலர் ஆறுமுகம், ராஜ்யசபா எம்.பி., தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ