உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிப்., 4ல் அ.தி.மு.க., கட்சி பணி களஆய்வு

பிப்., 4ல் அ.தி.மு.க., கட்சி பணி களஆய்வு

சென்னை, சென்னையில் கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில், பிப்., 4ல் கள ஆய்வு கூட்டம் நடக்க உள்ளது. அன்று காலை 10:00 மணிக்கு வட சென்னை வடகிழக்கு, மாலை 4:00 மணிக்கு வட சென்னை வடமேற்கு மாவட்டங்களில் நடக்கும் கள ஆய்வு கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்பார்.மாலை 4:00 மணிக்கு தென் சென்னை தென்கிழக்கு மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் செம்மலை; காலை 10:00 மணிக்கு, தென் சென்னை வடகிழக்கு, மாலை 4:00 மணிக்கு, தென் சென்னை வடமேற்கு மாவட்டங்களில், முன்னாள் அமைச்சர் அன்பழகன்.மாலை 4:00 மணிக்கு தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கள ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பர்.காலை 10:00 மணிக்கு வட சென்னை தென்கிழக்கு, மாலை 4:00 மணிக்கு வட சென்னை தென்மேற்கு மாவட்டங்களில், முன்னாள் அமைச்சர் மோகன்; மாலை 4:00 மணிக்கு சென்னை புறநகர் மாவட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., சிங்காரம் ஆகியோர் பங்கேற்பர். கட்சியினர் அவர்களிடம் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.இத்தகவலை அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி