பல்லாவரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
பல்லாவரம், பெண்கள் குறித்து தவறாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரியும், பல்லாவரத்தில் அ.தி.மு.க., சார்பில், நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், பல்லாவரம் முன்னாள் எம்.எல்.ஏ., தன்சிங் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் அமைச்சர் சின்னையா உள்ளிட்ட நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியபோது, ”தமிழகத்தில் அமைச்சராக உள்ள பொன்முடியின் பேச்சு, எவ்வளவு பெரிய அவமானம். அதை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா? பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, கைது செய்ய வேண்டும்,” என்றார்.