உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வரும் 9ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

வரும் 9ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சென்னை, தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து கீழ்க்கட்டளையில், வரும் 9ம் தேதி, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சி முடிய இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், கீழ்க்கட்டளை உள்ளிட்ட தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப் படவில்லை. சொத்துவரி, குடிநீர், கழிவுநீர் கட்டணம், குப்பைவரி ஆகியவை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு காரணமான தி.மு.க., அரசையும், தாம்பரம் மாநகராட்சியையும் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் வரும், 9ம் தேதி, மாலை, கீழ்க்கட்டளை பெரிய தெருவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை