உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் கோளாறு

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் கோளாறு

சென்னை, குவைத் செல்லும் 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' பயணியர் விமானம், நேற்று மாலை 4:05 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, 185 பயணியர் உட்பட, 191 பேருடன் புறப்பட தயாரானது. விமானம் ஓடுபாதையில் ஓடத் துவங்கியபோது, விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதை, விமானி கண்டறிந்தார். ஓடுபாதையிலே உடனடியாக விமானத்தை நிறுத்தினார். தகவலறிந்து வந்த விமான பொறியியல் குழுவினர், விமானத்தை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். மாலை 5:20 மணிக்கு பழுது நீக்கப்பட்ட பின், சென்னையில் இருந்து குவைத்துக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இதனால் பயணியர் ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து அவதிப்பட்டனர். பாக்டோக்ராவுக்கு விமான சேவை மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா நகரமான பாக்டோக்ராவுக்கு, சென்னையில் இருந்து 'இண்டிகோ' நிறுவனம், தினமும் விமான சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், சென்னையில் இருந்து பாக்டோக்ராவுக்கு, ஆக., 15 முதல், தினசரி விமானங்களை இயக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை