உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விமான கட்டுமான ஏ.ஐ., கல்வி வேலம்மாள் பள்ளியில் துவக்கம்

விமான கட்டுமான ஏ.ஐ., கல்வி வேலம்மாள் பள்ளியில் துவக்கம்

சென்னை, வேலம்மாள் ஆலோஜி தொழில்நுட்ப பள்ளியில், செயற்கை நுண்ணறிவுடன் ஒருங்கிணைந்த கட்டுமான கல்வி துவக்கப்பட்டு உள்ளது.வேலம்மாள் ஆலோஜி தொழில்நுட்ப பள்ளி, சென்னையில் முகலிவாக்கம், பள்ளிக்கரணை மற்றும் கோவையின் பீலமேடு ஆகிய இடங்களில் செயல்படுகிறது.தொழில்நுட்ப கல்வியை வழங்கும் இந்த பள்ளியில், விமானக் கட்டுமானத்தில், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு சார்ந்த பாடத்திட்டம், 'வாயு' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இந்திய அமெச்சூர் விமானிகள் சங்கமான ஐ.ஏ.ஏ.ஏ.,யின் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுடன், இந்த பாடத்திட்டம் நடத்தப்படும்.அதற்கு, ஐ.ஏ.ஏ.ஏ.,யின் துணைத்தலைவரும், இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குனருமான சுந்தரமூர்த்தி, சைமேட்ஸ் ஸ்டெப்பப்பின் இன்குபேஷன் மேலாளர் கருணாகரன், புள்ளினம் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜீஸ் நிறுவனர் சிவபிரசாத் ஆகியோர் ஆலோசகர்களாக உள்ளனர்.விமானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் சார்ந்த கல்வியை மேம்படுத்தும் வகையில், வேலம்மாள் ஆலோஜி தொழில்நுட்ப பள்ளி மற்றும் இந்திய அமெச்சூர் விமானிகள் சங்கத்திற்கு இடையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.நிகழ்வில், 'வாயு' இணை இயக்குனர் சுரேகா, வேலம்மாள் ஆலோஜி தொழில்நுட்ப பள்ளியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ