உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அகில இந்திய பல்கலை சதுரங்கம் எஸ்.ஆர்.எம்., அணி தொடர் சாம்பியன்

அகில இந்திய பல்கலை சதுரங்கம் எஸ்.ஆர்.எம்., அணி தொடர் சாம்பியன்

சென்னை,அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான செஸ் போட்டி, குஜராத் மாநிலத்தில் உள்ள மார்வாடி பல்கலையில், கடந்த 2ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை, அண்ணா பல்கலை, டில்லி பல்கலை, ஜேப்பியார் உள்ளிட்ட பல்கலை அணிகள் பங்கேற்றன.எஸ்.ஆர்.எம்., பல்கலை ஐந்து சுற்றிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடர்ந்து வெற்றி பெற்றது.அனைத்து சுற்றுகள் அடிப்படையில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடத்தையும், டில்லி பல்கலை இரண்டாமிடத்தையும் பிடித்தன.அண்ணா பல்கலை, குண்டூர் கே.எல்.இ.எப்., பல்கலை அணிகள் மூன்று மற்றும் நான்காம் இடங்களை கைப்பற்றின.இந்த வெற்றியால் எஸ்.ஆர்.எம்., பல்கலை நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சியில், எஸ்.ஆர்.எம்., அணியின் கிராண்ட் மாஸ்டர்கள் அர்ஜூன் கல்யாண், பிரனேஷ், ஹரி கிருஷ்ணன், இன்டர்நேஷ்னல் மாஸ்டர்கள், ஸ்ரீஹரி, ராகுல், எல்.ஆர்.ஸ்ரீஹரி மற்றும் பயிற்சியாளர் செல்ந்தில்குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ