உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மருத்துவமனை கட்டடம் ரூ.15.15 கோடி ஒதுக்கீடு

மருத்துவமனை கட்டடம் ரூ.15.15 கோடி ஒதுக்கீடு

சென்னை, சென்னை சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை, 115 ஆண்டு பழமையானது. இந்த மருத்துவமனையை மேம்படுத்தும் வகையில், மருத்துவமனை வளாகத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு, அவசர கால பச்சிளங்குழந்தை பராமரிப்பு மையம் அமைக்கும் பணி, 2022ல் துவங்கப்பட்டது.இரண்டு மாடி கட்டடமாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஆறு அடுக்குமாடி கட்டடமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி, குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு, டாக்டர்களுக்கான அறை, பொது வார்டு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.இதற்காக, 15.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்து, அதற்கான அரசாணையை, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ