உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 24 மாடிகளுடன் பிரீமியம் குடியிருப்புகள் கோயம்பேட்டில் கட்டுது அமரா குழுமம்

24 மாடிகளுடன் பிரீமியம் குடியிருப்புகள் கோயம்பேட்டில் கட்டுது அமரா குழுமம்

சென்னை, கோயம்பேட்டில், 24 மாடிகள் கொண்ட பிரீமியம் குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்த 'அமரா' குழுமம் திட்டமிட்டுள்ளது.சென்னையில் மக்கள் அடர்த்தி மற்றும் இடப்பற்றாக்குறை அடிப்படையில், மக்களுக்கு அதிக வீடு கிடைக்க, அடுக்குமாடி திட்டங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கடந்த, 2008ல் கட்டடங்களின் உயர கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் அதிகரித்துள்ளன. பெரும்பாலான குடியிருப்புகள் பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டியே அமைகின்றன. தற்போது, போரூர் முதல் மாதவரம் வரையிலான பகுதிகளில் கட்டுமான திட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த வகையில், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில், 11 முதல் 19 மாடி வரையிலான அடுக்குமாடி திட்டங்கள் வந்துள்ளன. புதிய முன்னேற்றமாக, சென்னையை சேர்ந்த அமரா குழுமம், கோயம்பேட்டில், 24 மாடி குடியிருப்பை கட்ட திட்டமிட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், இத்திட்டம் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், அதிகபட்ச ஆடரம்பர வசதிகள் அடங்கிய பிரீமியம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதுகுறித்து, ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் கூறுகையில், 'மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாகவும், கோயம்பேட்டில் இருந்து ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைய உள்ளன. இந்த நிலையில், அடுக்கு மாடி குடியிருப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது' என்றனர்.**


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை