உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்பத்துாரில் கழிவு நீர் உந்து நிலையம் 2 நாள் மூடல்

அம்பத்துாரில் கழிவு நீர் உந்து நிலையம் 2 நாள் மூடல்

சென்னை, அம்பத்துார் மண்டலத்தில், 29, 30 ஆகிய தேதிகளில், கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது என, குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அம்பத்துார் மண்டலம், பாடி மேம்பாலம் கீழ் பகுதியில் கழிவுநீர் உந்து குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால், 29, 30 தேதிகளில், அம்பத்துார் மண்டலத்தில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது. இரண்டு நாட்களும், இயந்திர நுழைவு வாயில் வழியாக கழிவுநீர் வெளியேற வாய்ப்புள்ளது. இதற்கு, 81449 30907 மற்றும் 81449 30257 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டால், கழிவுநீர் வெளியேறுவது தடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !