உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பின்டெக் சிட்டியில் ஏக்கர் ரூ.65 கோடிக்கு ஏலம் 

பின்டெக் சிட்டியில் ஏக்கர் ரூ.65 கோடிக்கு ஏலம் 

சென்னை, சென்னை நந்தம்பாக்கத்தில், 'டிட்கோ' நிறுவனம் அமைக்கும் நிதிநுட்ப நகரில், ஏக்கருக்கு, 56.25 கோடி ரூபாய், 65 கோடி ரூபாய் விலை கிடைத்துள்ளது. உள்நாடு, பன்னாட்டு தொழில்நுட்ப நிதி நிறுவனங்கள், வங்கி, நிதிச்சேவை, காப்பீடு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.இதற்காக, சென்னை நந்தம்பாக்கத்தில் முதல் கட்டமாக, 56 ஏக்கரில், 83 கோடி ரூபாய் செலவில், 'பின்டெக் சிட்டி' எனப்படும் நிதிநுட்ப நகரத்தை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைத்து வருகிறது. அங்குள்ள நிலங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு, நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளன. அதன்படி, நிதிநுட்ப நகரில் உள்ள மனைகள் ஏல டெண்டர் முறையில், 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடும் பணி துவங்கியுள்ளது. இதுவரை, 1.70 ஏக்கர், 1.56 ஏக்கர், 2.82 ஏக்கர், 2.75 ஏக்கர், 2.58 ஏக்கர் என ஐந்து மனைகள், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.இதை தொடர்ந்து, 2.75 ஏக்கர், 2.58 ஏக்கர் உடைய இரு மனைகளை ஏக்கருக்கு, 56 கோடி ரூபாய் நிர்ணயம் செய்து, ஏல டெண்டர் சமீபத்தில் கோரப்பட்டது.அதில் பங்கேற்ற நிறுவனங்களில் ஒரு மனைக்கு, 'ஈக்விடாஸ்' நிறுவனமும், மற்றொரு மனைக்கு, ஸ்ரீபெரும்புதுார் மெட்ரோ புராப்பர்டீஸ் அண்டு லாஜிஸ்டிக் இந்தியா நிறுவனமும் தேர்வாகியுள்ளன. ஒரு மனையில் ஏக்கருக்கு, 56.25 கோடி ரூபாயும், மற்றொரு மனையில் ஏக்கருக்கு, 65 கோடி ரூபாயும் டிட்கோவுக்கு விலை கிடைத்துள்ளது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி