உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கால்வாயில் சிக்கிய முதியவரின் கால்

கால்வாயில் சிக்கிய முதியவரின் கால்

போரூர், சென்னையில் நேற்று பெய்த மழைநீர், போரூர் - பரங்கிமலை - பூந்தமல்லி நெடுஞ்சாலை, போரூர் மேம்பாலத்தின் கீழ், குளம் போல் தேங்கியது. இதுகுறித்து அறிந்த மாநகராட்சி ஊழியர்கள், அந்த சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாய் மூடியை திறந்து, மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த முதியவரின் கால், திறந்திருந்த வடிகால்வாயில் சிக்கியது. அங்கிருந்த ஊழியர்கள், அவரை மீட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ