உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அந்தமான், கொச்சிக்கு அக்., முதல் விமான சேவை

அந்தமான், கொச்சிக்கு அக்., முதல் விமான சேவை

சென்னை, சென்னையில் இருந்து அந்தமான், கொச்சி இடையே மீண்டும் விமான சேவை 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம் அக்., மாதம் முதல் துவங்க உள்ளது.சென்னையில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 3:00 மணிக்கு அந்தமான் சென்றடையும். அந்தமானில் இருந்து காலை 10:10 மணிக்கு புறப்படும் விமானம், மதியம் 12:20 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சேவைகள் அக்., 1ம் தேதியில் இருந்து துவங்க உள்ளன.மேலும், சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு காலை 6:25 மணிக்கு புறப்படும் விமானம், காலை 8:20 மணிக்கு சென்றடையும்.கொச்சியில் இருந்து மாலை 6:30 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 8:05 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சேவைகள் வரும் அக்., 10ம் தேதியில் இருந்து துவங்குகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை