அண்ணா நகர் மதுவிலக்கு ஜெ.ஜெ., நகருக்கு மாற்றம்
அண்ணா நகர்: அரும்பாக்கம் எல்லைக்கு மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படுவதால், அண்ணா நகர் மதுவிலக்கு காவல் பிரிவு அலுவலகம், ஜெ.ஜெ., நகர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அரும்பாக்கம் காவல் நிலையக் கட்டடத்தில், அரும்பாக்கம் சட்டம் - ஒழுங்கு, குற்றத்தடுப்பு, உதவி கமிஷனர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. அத்துடன், பல ஆண்டுகளாக, கலால் துறையின் அண்ணா நகர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனர் உள்ளிடோரின் அலுவலகமும் செயல்பட்டன. தற்போது, அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் இருந்து, அரும்பாக்கத்திற்கு தனியாக மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்காக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்த, கலால் எனும் அண்ணா நகர் மது விலக்கு அலுவலகம், ஜெ.ஜெ., நகர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணா நகர், அமைந்தகரைக்கு அண்ணா நகரிலும்; அரும்பாக்கம், சூளைமேடு பகுதிக்கு தனியாக, அரும்பாக்கம் நிலையத்திலும் மகளிர் காவல் நிலையம் பிரிக்கப்பட்டுள்ளது.