வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மக்களின் வரிப்பணம் ஒருபொழுதும் வீணாக்கப்படுவதில்லை நிச்சயமாக. இந்தபணம் அந்த அந்த தொகுதியில் இருக்கும் திமுக கஸ்மாலங்களுக்கு போய் சேருகின்றது.
அண்ணா நகர், சென்னை மாநகராட்சியின் 2025- - 26-ம் ஆண்டுக்கான பட்ஜெட், மேயர் பிரியாவால் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.பட்ஜெட்டில், விளையாட்டு மேம்பாடு, குழந்தைகளை கவரும் பூங்கா என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.அதில், 46வது அறிவிப்பான, பூங்கா மற்றும் விளையாட்டு திடங்கள் துறையில், 10 இடங்களில் 5 கோடி ரூபாயில், மின் ஒளியுடன் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஏற்கனவே, அண்ணா நகரில் மூன்றாவது அவென்யூ, நியூ ஆவடி சாலை இணைப்பு, திருமங்கலம் பகுதிகளில் அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்றுகள், பயனற்று கிடக்கின்றன. இதை முறையாக சீரமைக்காமல், மேலும் 10 இடங்களுக்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மக்களின் வரிப்பணம் ஒருபொழுதும் வீணாக்கப்படுவதில்லை நிச்சயமாக. இந்தபணம் அந்த அந்த தொகுதியில் இருக்கும் திமுக கஸ்மாலங்களுக்கு போய் சேருகின்றது.