பெயின்டரிடம் வழிப்பறி மேலும் ஒருவர் கைது
திருமங்கலம், தாஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத், 32. இவர், திருமங்கலம், பாடிக்குப்பம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, பெயின்ட்ராக பணிபுரிகிறார்.கடந்த பிப்., 2ம் தேதி, திருவேற்காட்டில் உறவினர் நிகழ்ச்சிக்கு சென்ற வினோத், இரவு பாடிக்குப்பம் வழியாக நடந்து சென்றார்.அப்போது, அவரை வழிமறைத்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, 4,000 ரூபாய், மொபைல் போனை பறித்து தப்பினர்.புகாரின்படி, திருமங்கலம் போலீசார், அதே பகுதியை சேர்ந்த சுதீஷ், 22, கோகுல், 23, ஆகிய இருவரை, அடுத்த நாளே கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், தலைமறைவாக இருந்த, முகப்பேரை சேர்ந்த நரசிம்மன், 22, என்பவரை போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.