திருத்தணி பஸ் விபத்து மேலும் ஒருவர் உயிரிழப்பு
ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பத்தில் இருந்து, கடந்த 7ம் தேதி திருத்தணிக்கு சென்று கொண்டிருந்த தடம் எண்: டி48 என்ற அரசு பேருந்து, கே.ஜி.கண்டிகை அருகே விபத்தில் சிக்கியது. இதில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில், பலத்த காயமடைந்த பூவரசன், 21, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.வேலைநிறுத்தம் வாபஸ்கூலி உயர்வு கேட்டு நெசவாளர்கள் மூன்று வாரங்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். மாற்று வேலை தேடி சென்ற நெசவாளர்கள், பேருந்து விபத்தில் சிக்கி பலியான சம்பவத்தால், மேலும் வேதனை அடைந்தனர். இந்நிலையில், வேலை நிறுத்தத்தை கைவிட்டு, நேற்று முதல் தறிகளை இயக்க துவக்கியுள்ளனர்.