உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவி பலாத்கார வழக்கு மேலும் ஒருவருக்கு காப்பு

மாணவி பலாத்கார வழக்கு மேலும் ஒருவருக்கு காப்பு

சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்த, 21 வயது மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவியை, கல்லுாரி மாணவரான சுரேஷ் உட்பட மூவர் காதல் வலையில் வீழ்த்தினர். பின், தனியார் விடுதிக்கு மாணவியை அழைத்துச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார், கல்லுாரி மாணவர் சுரேஷ் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரை, நேற்று கைது செய்தனர். அவர் 'ஸ்நேப் ஷாட்' செயலி வாயிலாக, மாணவிக்கு பழக்கமானவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ