உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சின்ன போரூரில் மீண்டும் பள்ளம் இரு கடைகளில் விரிசல் இரு கடைகளில் விரிசல்

சின்ன போரூரில் மீண்டும் பள்ளம் இரு கடைகளில் விரிசல் இரு கடைகளில் விரிசல்

போரூர், வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு சின்ன போரூரில் அண்ணா சாலை உள்ளது. மவுன்ட் -- பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் அண்ணா சாலையில், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில், கடந்தாண்டு நவ., மாதம் அண்ணா சாலை மற்றும் மருத்துவமனை சாலை சந்திப்பில், குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக, 8 அடி ஆழம், 4 அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.இதை குடிநீர் வாரிய அதிகாரிகள் சீர் செய்தனர். இந்நிலையில், நேற்று அதே பகுதியில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, அச்சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது.மேலும், அண்ணா சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால், அருகே உள்ள இரண்டு கடைகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது வியாபாரிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.பள்ளத்தை முறையாக சீரமைக்காததே, அடிக்கடி பள்ளம் ஏற்பட காரணம் என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டினர்.

நெசப்பாக்கம்

கோடம்பாக்கம் மண்டலம், 137வது வார்டில் நெசப்பாக்கம் பாரதி நகர் பிரதான சாலை உள்ளது. இது, கானு நகர் மற்றும் நெசப்பாக்கம் பகுதியை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது.இச்சாலையில், பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் கசிந்து மண் சரிந்து சாலை உள்வாங்கியது. இந்நிலையில், அதே இடத்தில், 10 அடி ஆழம், 5 அடி அகலத்திற்கு மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, பள்ளத்தை சுற்றி, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த பணிகளும் மேற்கொள்ளாததால், தொடர்ந்து மண் சரிந்து பள்ளம் விரிவடையும் நிலை உள்ளது.இதனால், அச்சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை குடிநீர் வாரியம் சீர்செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை