ஹாஜி நியமனம் செய்ய விண்ணப்பம் வரவேற்பு
சென்னை, 'சென்னை மாவட்டத்தில் புதிய ஹாஜியான பணியாற்ற தகுதியானோர் விண்ணபிக்கலாம்' என, சென்னை கலெக்டர் சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஹாஜியாக பணிபுரிந்த சலாவுதீன் முஹம்மத் அயுப் சாஹிப், கடந்த மே, 24ல் உயிரிழந்தார். தற்போது, சென்னைக்கு ஹாஜி நியமிக்க, கலெக்டர் தலைமையில், காஜி நியமன கமிட்டி அமைக்கப்பட உள்ளது. காஜியாக பணிபுரிய விருப்பமுள்ளோர், 'ஆலிம்' அல்லது 'பாசில்' ஆக இருக்க வேண்டும். இஸ்லாமியத்தில் புலமை பெற்றவராகவும், பதிவு பெற்ற அரபிக்கல்லுாரியில் ஆசிரியராகவோ, பேராசிரியராகவோ பணிபுரிந்திருக்க வேண்டும். தகுதியுள்ள, 40 வயதுக்கு மேற்பட்டோர், செப்., 15க்குள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உரிய சான்றுடன், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.