உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கல்லுாரி விடுதியில் சேர விண்ணப்பம் வரவேற்பு

கல்லுாரி விடுதியில் சேர விண்ணப்பம் வரவேற்பு

சென்னை, தமிழக அரசால், சென்னை மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பிரிவு கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, 18 விடுதிகள் உள்ளன.பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவர்கள், இந்த விடுதியில் சேரலாம். இங்கு, எவ்வித செலவுமின்றி, மூன்று வேளையும் உணவு மற்றும் தங்கு வசதி அளிக்கப்படும்.விண்ணப்பங்கள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தடுத்தப்பட்டோர் நல அலுவலகம் அல்லது விடுதி காப்பாளரிடம் பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூலை 17க்குள் சமர்ப்பிக்கலாம். இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கும், தனியே இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !