கிண்டியில் வரும் 13ல் தொழில் பழகுநர் பயிற்சி
சென்னை, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் தென் மண்டல திறன் மேம்பாடு, தொழில் முனைவு இயக்கம் இணைந்து, ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு, மாவட்ட அளவிலான தேசிய தொழில் பழகுநர் பயிற்சி முகாம் நடக்க உள்ளது.இப்பயிற்சி முகாம், கிண்டியில் உள்ள அரசின் தொழில் பயிற்சி நிலையத்தில், காலை 9:00 மணிக்கு நடக்க உள்ளது.இங்கு, தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தொழில் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். தொழில் பழகுநர் பயிற்சியாளர்களுக்கு, உதவித்தொகை, சான்றிதழ் வழங்கப்படும்.இதுவரை தொழில் பழகுநர் பயிற்சி முடிக்காத, அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்றோர், இம்முகாமில் பங்கேற்கலாம்.பங்கேற்க விரும்புவோர், www.apprenticeshipindia.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து, முகாமில் பங்கேற்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.