உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூடுதல் விமானங்களை கையாளும் வசதி சென்னை விமான நிலையத்தில் ஏற்பாடு

கூடுதல் விமானங்களை கையாளும் வசதி சென்னை விமான நிலையத்தில் ஏற்பாடு

சென்னை:விமானங்களை நிறுத்துவதற்கு, 'பே' எனும் பகுதிகள், விமான நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் 130 'பே'க்கள் உள்ளன.இதில் உள்நாட்டில் இயங்கும் விமானங்களுக்காக 60 'பே'க்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றவை 'கார்கோ' மற்றும் இதர சேவைகளுக்கு பயன்படுகின்றன.விமானங்கள், ஓடுபாதையில் தரையிறங்கி டாக்சி வே வழியாக விமானம் நிற்கும் இடத்துக்கு செல்லும்போது, மெதுவாக நகரும் சூழல், சென்னை விமான நிலையத்தில் இருந்து வந்தது. டாக்சி வே பகுதி வளைவாக இருந்ததாலே, இவ்வாறு சென்றன.இதனால், ஒரு விமானம் தரையிறங்கும் சமயத்தில் அடுத்தடுத்து வரும் விமானங்களை தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.எனவே, டாக்சி வே பகுதியின் வளைவை நீக்கி, விமானங்கள் நேராக செல்லும் வகையில் மாற்றி அமைக்க, சென்னை விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதற்கான பணிகள், சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளன.இதனால், விமானங்கள் வேகமாக செல்லும் வகையில், டாக்ஸி வே வடிவமைக்கப்பட்டு உள்ளது. இனி ஓடுபாதையில் விமானங்கள் தாமதமின்றி தரையிறங்க முடியும்.இதேபோல், சரக்கு விமானங்களை கையாளும் கார்கோ பகுதியில் உள்ள விமானங்களை நிறுத்தும் இடங்களிலும் வசதி மேம்படுத்தப்பட்டு உள்ளது.வரும் நாட்களில் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் கையாளும் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இண்டிகோ ஏ.டி.ஆர்., விமான டெர்மினல் மாற்றம்

சென்னை விமான நிலையத்தில் 'டி1, டி2, டி4 ' ஆகிய முனையங்கள் செயல்படுகின்றன. இதில் இண்டிகோ விமான நிறுவனம் 'டி1' முனையத்தில் இருந்து இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சிறிய ரக ஏ.டி.ஆர்., விமானங்கள் புறப்படும் இம்முனையம், ஜூன் 1ம் தேதி முதல் மாற்றப்படுகிறது.சென்னையில் இருந்து துாத்துக்குடி, திருச்சி, மதுரை, சேலம், விஜயவாடா, ராஜமுந்திரி, கண்ணுார், கோழிக்கோடு, மங்களூர், மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் இண்டிகோவின் சிறிய ரக விமானங்கள் டி1 முனையத்திற்கு பதிலாக டி4 முனையத்தில் இருந்து இயங்கும் என, தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ