உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 1.45 ஏக்கர் நிலத்துக்கு கேட்கும் விலை...ரூ.350 கோடி! கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்துக்கு சிக்கல்

1.45 ஏக்கர் நிலத்துக்கு கேட்கும் விலை...ரூ.350 கோடி! கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்துக்கு சிக்கல்

சென்னை கிளாம்பாக்கம் ரயில் நிலையம் - பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கு, 1 ஏக்கர், 45 சென்ட் நிலத்தை தர, நில உரிமையாளர் 350 கோடி ரூபாய் இழப்பீடு கோருவது, புதிய பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. சந்தை மதிப்பு, 60 கோடி ரூபாயாக உள்ள நிலையில், நடைமுறைக்கு சாத்தியமில்லாத தொகை கேட்பதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், 40 ஏக்கரில், 400 கோடி ரூபாய் செலவில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, 2023 டிச., 30 முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லவும், வெளியூரில் இருந்து வருவோர், அங்கிருந்து தங்கள் பகுதிக்கு செல்லவும், மாநகர பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. மெட்ரோ ரயில் சேவை இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.இதை கருத்தில் வைத்து ஊரப்பாக்கம் - வண்டலுார் இடையே, கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.பயணியர் வசதிக்காக, ரயில் நிலையத்தையும், பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில், ஜி.எஸ்.டி., சாலையில், 74 கோடி ரூபாய் செலவில், 1,310 மீ., நீளத்துக்கு நடை மேம்பாலம் அமைக்க, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கு, கடந்த ஆண்டு மார்ச்சில் அடிக்கல் நாட்டப்பட்டது.ரயில் நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி., சாலை வரை, ௧ ஏக்கர், 45 சென்ட் நிலத்தை கையகப்படுத்த, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் வாயிலாக அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிவிக்கை சட்ட விதிகளின்படி சரியாக இல்லை எனக் கூறி, உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பழைய அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. விதிகளின்படி, புதிய அறிவிக்கை வெளியிட மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான பணிகளில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், 'நடை மேம்பாலத்துக்கு தேவையான நிலம் வழங்க, 350 கோடி ரூபாய் இழப்பீடாக அளிக்க வேண்டும்' என, நில உரிமையாளர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இடத்தின் சந்தை மதிப்பு 60 கோடி ரூபாயாக உள்ள நிலையில், நில உரிமையாளர் 350 கோடி ரூபாய் கேட்பதால், மாவட்ட நிர்வாகத்தினரும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நடைமுறையில் சாத்தியமில்லாத வகையில், அதிகபட்ச தொகையை நில உரிமையாளர் கேட்பதால், இந்த விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என, சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.நில உரிமையாளர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், இந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று தீர்வு காணவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில், மேம்பால பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Raghavan
ஏப் 15, 2025 21:49

கேட்பதுதான் கேட்கிற 500 கோடி என்று கேட்கவேண்டியதுதானே? கமிஷன் 20% போனால் கூட 400 கோடி வருமே .சொந்த பணத்தையா கொடுக்கப்போகிறார்கள்? அரசாங்கத்துக்கு வந்த வரி பணம்தானே.


B N VISWANATHAN
ஏப் 15, 2025 21:23

இதுல என்ன குழப்பம். பொது மக்கள் நலன் கருதி எடுக்கப்படும் நிலங்களுக்கு அரசாங்க வழிகாட்டி மதிப்புக்கு மேலும் ஒரு பைசா கொடுக்க வேண்டியது இல்லை. நில உரிமையாளர் கட்சிக்கு அன்பளிப்பு கொடுக்க சம்மதம் சொல்லி இருப்பார்.


ponssasi
ஏப் 15, 2025 17:54

ஆளும் கட்சி அதிகார மையங்களில் ஜெகத்தும் ஒருவர். இதுதான் நல்வாய்ப்பு சுமார் 350 கோடி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படும் என 100 கோடி திமுக அறக்கட்டளைக்கு கொடுப்பதாக சொன்னால் உடனடியாக 350 கோடி நில உரிமையாளருக்கு ஜகத்துக்கு வழங்க ஆணை பிறப்பிக்கப்படும். மீதம் 250 சும்மாவா? மீனம்பாக்கம் எதிரில் உள்ள பிரபலமான ஹோட்டல் மற்றும் அதை சுற்றியுள்ள பல ஏக்கர் நிலம் சுமார் 1000 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மற்றொரு அதிகார மையத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.


C G MAGESH
ஏப் 15, 2025 17:22

நில உரிமையாளர் ஜெகத்தை ரட்சிப்பவர், பரம ஏழை பாவம்


ravi
ஏப் 15, 2025 15:24

ஜெகமே ரட்சிக்க வேண்டும்


V GOPALAN
ஏப் 15, 2025 12:44

We request who is the owner and his background of this land.Must be Politically influenced. For parandhur also same formula should be applied for compensation. Kilambakkam is local station. Parabdur is for elite people. Govt is afford to pay 1000 times more


V GOPALAN
ஏப் 15, 2025 12:22

Stalin is ging Rs.40 from Kilsmbakkam to Koimbedu.One and half hour journey to get into Tindivanam bus which is 90 km. Whereas ticket is 25 rupees upto melmaruvathur. Stalin should reduce the bus fare to Rs.10. Otherwise train ticket should be 40 rupees from beach to kilambakkam . Tamilnadu us one trillion economy. We are very rich. We should not depend on central govt


Sundaresan S
ஏப் 15, 2025 11:30

350 கொடுத்துடுங்க. அதுக்காகத்தானே தேடி தேடி நிலத்தை வாங்கி குவிக்கிறோம்.


Kumar
ஏப் 15, 2025 10:52

எப்படி இருந்தாலும் கோபாலபுரம் தானே போகப்போகுது விடுங்க ஆபிசர்


திராவிடிய ஐயர்
ஏப் 15, 2025 10:31

நில உரிமையாளர் ஆளும் கட்சியை சார்ந்தவராம். என்னடா 1.45 ஏக்கர் நிலத்துக்கு 350 கோடி ரூபாய் இம்புட்டு தைரியமாக கேட்கிறார் என்று பார்த்தேன்.. சி எம் டி ஏ வும் கொடுப்பபாய்ங்க..


புதிய வீடியோ