உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவியிடம் போன் பறித்து சிக்கிய அசாம் வாலிபர்

மாணவியிடம் போன் பறித்து சிக்கிய அசாம் வாலிபர்

சென்ட்ரல்:ஆவடியைச் சேர்ந்தவர் 20 வயது கல்லுாரி மாணவி. இவர், தன் தோழியருடன் எழும்பூர் செல்வதற்காக, சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் நேற்று நின்றிருந்தார். அப்போது, அவர் தோளில் மாட்டியிருந்த பையில் இருந்த மொபைல் போனை திருடி, மர்ம நபர் தப்ப முயன்றார்.சுதாரித்து மாணவி கத்தவே, அப்பகுதியில் இருந்தோர் திருடனை மடக்கி பிடித்து, பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில், அசாம் மாநிலம், மரிகான் மாவட்டத்தைச் சேர்ந்த தில்தர் அலி, 28, என்பதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை