உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு மருத்துவமனையில் வாலிபர் மீது தாக்குதல்

அரசு மருத்துவமனையில் வாலிபர் மீது தாக்குதல்

சென்னை:ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், சாலை விபத்தில் மென்பொறியாளர் காயமடைய காரணமான தனியார் நிறுவன ஊழியர் மீது, உறவினர்கள் தாக்குதல் நடத்தினர்.சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக், 27; மென்பொறியாளர். அவர், நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில், தன் மனைவியுடன் எழும்பூர் எல்.ஜி.,சாலை வழியாக சென்றார். அப்போது, அவ்வழியே வந்த பெரவள்ளூரை சேர்ந்த தினேஷ், 30 என்பவரின் இரு சக்கர வாகனம், கார்த்திக் வாகனம் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காயமடைந்த இருவரும், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக்கை பார்க்க வந்த அவரது உறவினர்கள், விபத்துக்கு தினேஷ்தான் காரணம் என, சிகிச்சையில் இருந்த அவரை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த கார்த்திக், மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தினேஷ் புகாரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை