மேலும் செய்திகள்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
24-Jun-2025
குபேரா - டிரைலர்
16-Jun-2025
பாண்டிபஜார், தி.நகர் பெட்ரோல் 'பங்க்'கில், போலீஸ்காரரை தாக்கி தலைமறைவான இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருதம் போலீஸ் வளாகத்தில், கமாண்டோ படையில் போலீஸ்காரராக பணிபுரிபவர் சக்திவேல், 27.இவர், தி.நகர், டி.என்., சாலையில் உள்ள பெட்ரோல் 'பங்க்'கில், அரசு வாகனத்திற்கு நேற்று முன்தினம் இரவு டீசல் போட சென்றார்.டீசல் போட்டு பணம் அளிக்க 'பங்க்'கில் நடந்து சென்றபோது, அங்கு வந்த 'மாருதி ஸ்விப்ட்' கார், சக்திவேல் மீது மோதுவது போல் சென்றது. உடனே சக்திவேல், 'ஏன் இடிப்பது போல் வருகிறாய்' எனக்கேட்க, அப்போது கார் ஓட்டுநர் 'நீ பார்த்து போக வேண்டியது தானே' எனக் கூறியுள்ளார்.இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, காரில் வந்த நபர் இன்னொருவரை போன் செய்து வரவழைத்துள்ளார். பின் இருவரும் சேர்ந்து சக்திவேலை தாக்கினர்.இதில் காயமடைந்த சக்திவேல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.
24-Jun-2025
16-Jun-2025