உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணாதுரை நினைவிடம் மீது குண்டு வீச முயற்சி

அண்ணாதுரை நினைவிடம் மீது குண்டு வீச முயற்சி

சென்னை:மெரினா கடற்கரையில் உள்ள, மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., நினைவிடம் அருகே, நேற்று மாலை, போதையில் வாலிபர் ஒருவர் நின்றார். அவர், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் குண்டை எடுத்து, அண்ணாதுரை நினைவிடம் மீது வீச முயன்றார்.அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவரை பிடித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம், 38, என்பது தெரியவந்துள்ளது. எதற்காக மண்ணெண்ணெய் குண்டு வீச முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை