அடாவடித்தனம் செய்த ஆட்டோ ஓட்டுனர் கைது
அம்பத்துார், அம்பத்துார், சோழபுரத்தை சேர்ந்தவர் எஸ்.கொடியரசு, 40; அம்பத்துார் ரயில்வே கேட் அருகே டீ கடை நடத்தி வருகிறார். கடந்த 7ம் தேதி இரவு, 11:30 மணியளவில், டீக்கடையை மூடிவிட்டு, நண்பர் நாகராஜ் உடன் வீட்டிற்கு சென்றபோது, வேகமாக வந்த ஆட்டோ நாகராஜ் மீது மோதியது. கீழே விழுந்து அவர் பலத்த காயம் அடைந்தார்.இதுகுறித்து, ஆட்டோ ஓட்டுனரிடம் கொடியரசு நியாயம் கேட்டபோது, அவரை அவமானமாக திட்டியதுடன், இரும்பு பைப்பால் தலையில் தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். மேலும், டீக்கடைக்கு சென்று, அங்கு வேலை பார்த்த 'சீனிவாசன், சிவராஜ் ஆகியோரையும், ஆட்டோ ஓட்டுனர் தாக்கி விட்டு தப்பினார்.இதில் காயமடைந்த நால்வரும், அம்பத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து, அம்பத்துார் போலீசார் வழக்குப்பதிந்து, அம்பத்துாரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கோட்டை சரவணன், 31 என்பவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைத்தனர்.