மேலும் செய்திகள்
பெண்ணிடம் அத்துமீறல் ஆட்டோ ஓட்டுநர் கைது
11-Oct-2025
இளைஞருக்கு உதவிய பெண் ஆட்டோ ஓட்டுநர்
20-Oct-2025
வண்ணாரப்பேட்டை: வீட்டு வசதி வாரியத்தில் உள்ள மூன்று வீடுகளில் திருடிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். பழைய வண்ணாரப்பேட்டை, ராமதாஸ் நகரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜசேகரன், 42. இவர், கடந்த 6ம் தேதி, வீட்டை பூட்டி அருகில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார். மறுநாள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தில், இரண்டு மொபைல் போன்கள், 12,300 ரூபாய் திருடு போனது தெரிந்தது. இது குறித்து, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், அதே குடியிருப்பைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஸ்டீபன், 25 என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதேபோல, அருகில் வசிக்கும் சுந்தர், 36, தமிழரசி, 38 ஆகியோரது வீட்டிலும் திருடியது தெரியவந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒரு மொபைல் போன், டேப்லட், மூன்று பட்டுப்புடவைகளை மீட்டனர்.
11-Oct-2025
20-Oct-2025